ரிக்வேத ஆரியர்கள் ‘என்னும் இவ்வாய்வு நூலில் இந்தியாவின் மேற்கிலிருக்கும் மத்திய தரைக்கடற்கரை நாடுகளிலிருந்து
ஆப்கானிஸ்தான் வழியாகச் சிந்து நதி – சப்த சிந்து நதிதீரத்தில் வந்து பகுடியேறிய ஆரியர்கள் வளமான நாகரியத்தில் திளத்திருந்த நாட்டுக்குடிமக்களை வென்று வீழ்த்திக் கிழக்கே நோக்கிக் கங்கை நதிதீரம் வரை பரவினார்கள். அவர்கள் தம்முடன் போர்களத்தில் விரைந்து பாய்ந்து செயலாற்றவல்ல குதிரைகளைக்கொண்டு வந்தார்கள்.இதுவே நாட்டில் குடியிருந்த சிந்துசமவெளி நாட்டு மக்களையும் தஸ்யுக்களையும், கிராதர்களையும், நாகர்களையும் வேறு பல மக்களினங்களையும் பல்வேறு முயற்சிகளைக் கையாண்டு, வென்று அடிமைப்படுத்தி ஆள உதவிற்று என ராகுல்ஜி எடுத்துக்கூறுகிறார். சிந்துணமவெளி மக்களைத் தஸ்யூக்கள், திராவிடர்கள் என்று அழைக்கிறார்கள்.
நூல் நான்கு பாகங்களாக இயங்குகிறது. முதல்பாகம், ஆரியர்கள் இந்தியா வந்த பிறகு ரிக்வேதம் பிறந்தது. சப்தசிந்து பூமியில் பழைய இன நாகரிகம் உயர்ந்தோங்கியிருந்தது. ஆதி ஆரிய இனக்குழுக்கள் புரு, யது, துர்வசு, த்குஹ்யு, அனு என ஐந்தாகப்பிரிந்திருந்தன. இந்தியாவிற்கு வந்த ஆரியர் பல்வேறு இடங்களில் பரவி அவ்வழி ஆதிக்கத்தையும் பழக்கவழக்கத்தையும் , பரப்பியதை ராகுல்ஜி மிக விபரமாக எடுத்துச் சொல்கிறார்.
Reviews
There are no reviews yet.