Thulasidasar Mudhal Mirabai Varai
‘‘நான் கடவுளைப் பார்க்க வேண்டும். நீங்களும் நானும் எப்படி நேருக்கு நேராகப் பார்க்கிறோமோ, அதே போல பார்க்க வேண்டும். உங்களால் எனக்கு கடவுளைக் காட்ட முடியுமா?’’ என பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பார்த்துக் கேட்ட நரேந்திரன், அவரின் அருளால் காளியின் தரிசனம் பெற்றார். அதுவும் அவர் விரும்பியது போல நேருக்கு நேராகவே… விவேகானந்தனாய் நிமிர்ந்தார். பக்தி அல்லது ஞானம் என்கிற சாவி ஆன்மிக உலகின் அற்புத வாசலைத் திறந்து விடுகிறது. மகோன்னதமான அந்த உலகத்திற்கான பாமர மொழி பக்தி செய்வது – அதுவும் திகட்டத் திகட்ட பக்தி செய்வது மட்டுமே. அந்த பக்தி, பக்தனை நோக்கி கடவுளை இழுத்து வந்து இருவரையும் பிணைத்து விடுகிறது. இந்த வகையில் பாண்டுரங்கன் பக்திக்கு கட்டுப்பட்டவன் என உறுதி செய்கிறது இந்த நூல்.
சைவ சமயத்தில் ஈசன் பல திருவிளையாடல்கள் புரிந்து தன் பக்தனைத் தம்மோடு இணைத்துக் கொண்டதை பெரிய புராணம் கதை கதையாய் பாடிக் களித்தது போலவே, வைணவ பக்தர்களை மகாவிஷ்ணு எப்படி எப்படியெல்லாம் தேடிச் சென்று அருள் செய்தான் என்பதை விதவிதமாகச் சொல்கிறது இந்த புத்தகம். வழிபாடு, கடவுள் என எதுவானாலும் அதில் ‘தீவிர பக்தி செய்’ என்றுதான் நம் முன்னோர்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தி சொல்லி இருக்கிறார்கள். இதில் என்ன விசேஷம் தெரியுமா? பக்தி என்றால் எல்லாவற்றையும் விட்டு விட்டு கண்மூடி காட்டில் அமர்ந்து தியானித்துக் கொண்டிரு என்பதல்ல. முதலில் கடமை, கூடவே கடவுள் என்பதாக… எளியவனுக்கான கடவுளாய் நிற்கிறான், செங்கல்லில் நம் பாண்டுரங்கன். நீங்கள் புரட்டும் பக்கங்களில் எல்லாம் அவன் அருள் ததும்பி வழியும். உள்ளம் பக்தியால் விகசிக்கும்!
Reviews
There are no reviews yet.