1 review for கெட்ட வார்த்தை
Add a review
You must be logged in to post a review.
Original price was: ₹340.00.₹320.00Current price is: ₹320.00.
சாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள். அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல் விவரிப்பவை. இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்குகிறார்.
Delivery: Items will be delivered within 2-7 days
Kathir Rath –
கெட்ட வார்த்தை
சாரு நிவேதிதா
சாரு எல்லாரையும் போல் எனக்கும் ஒரு ஆபாச எழுத்தாளராகத்தான் அறிமுகம் செய்யப்பட்டார். அதை விட முக்கியமாக திமிர் பிடித்தவராக இல்லை இல்லை தலைக்கனம் கொண்டவராக. ஆனால் எவ்வயதினரும் தன்னை சாரு என்றே பெயர் சொல்லி அழைக்க விரும்பும் நபர். அவருடைய தனிமையை தொந்தரவு செய்ய விரும்பும் நபர்களால் விமர்சிக்க படுகிறார் என்பது புரிய நெடுநாள் ஆனது. அந்த நெடுநாள் என்னுடைய மிகப்பெரிய இழப்பாக கருதுகிறேன்.
இந்த புத்தகத்தையே எடுத்துக் கொண்டால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவரது வலைதளத்தில் எழுதிய கட்டுகளின் தொகுப்பு போல இருக்கும். ஆனால் இது முழுக்க பேசுவது தமிழ் எழுத்தாளரின் அபத்த வாழ்வினை. பத்து ஆண்டுகளுக்கு முன்பு நானும் வலைதளங்களில் வாசிக்கவும் எழுதவும் செய்ய துவங்கி இருந்தேன் ஆனால் சினிமா சினிமா சினிமா என்று அதற்குள்ளேயே மூழ்கி முட்டை விட்டுக் கொண்டிருந்தேன். இலக்கியம் பக்கம் திரும்ப, நவீன இலக்கியத்தை புரிந்துக் கொள்ள நேரம் ஒதுக்காத்து முழுக்க என்னுடைய இழப்புதான்.
சாருவின் எழுத்துகள் எப்போதும் போதை தரக்கூடியவை. போதை என்றால் குழப்பமான சுவாரசியம். ஒரு கேள்வி கேட்கப்படும். அதற்கு பதில் சொல்ல துவங்குவார். இடையே வேறு ஒரு விசயம் நோக்கி பயணிக்கும் அவர் எழுத்து திரும்ப வேறு பக்கம் கட் அடித்து இறுதியாக யூ டர்ன் போட்டு வந்து நிற்பதற்குள் நாம் அந்த கேள்வியை மறந்திருப்போம். வண்டி அங்கு வந்து நிற்கும்போது ஏற்படும் குழப்பம் தரும் சுவாரசியத்தை தமிழில் வேறு எந்த எழுத்தாளரும் எனக்கு தந்த்தில்லை.
எழுத்தில் மட்டும்தான் இப்படியா என்றால் இல்லை, ராஸலீலா குறித்த கலந்துரையாடலில் ஒரு கேள்விக்கு பதில் சொல்கையிலும் மைக்கேல் இப்படித்தான் பேசினார். இப்படி சுவாரசியமான நபருக்கு தொந்தரவு வராமலா இருக்கும்? ஆனால் பாவம், தனக்கு பிடித்தது போல் எழுத்தில் மட்டும் மூழ்கி கிடக்க விரும்பும் ஒரு நபரை ஒவ்வொருவராய் நோண்டுவதை பார்க்கையில் தூங்குபவனை எழுப்பி “நல்ல தூக்கமா? சரி தூங்கு” என்று சொல்வது போல் இருந்த்து.
சாருவின் அனைத்து எழுத்துகளையுமே படிக்க சொல்லுவேன். அது குப்பை என்று திட்டுபவர்களால் கூட அவரை புறக்கணிக்க முடியவே முடியாது. தொடர்ச்சியாக தன்னை வாசப்பவர்களுக்கு ஏதாவது ஒன்று கற்றுக் கொடுத்து, அவர்களிடம் இருந்தும் கற்றுக் கொண்டு ஒரு தலைமுறையில் இரசணையை மேம்படுத்தியதில் சாருவின் பங்கு அளப்பறியது.
சாருவின் பத்து ஆண்டு கால முந்தைய குரலை கேட்க விரும்புபவர்களுக்கு இந்த நூலை பரிந்துரைக்கிறேன்.