அசுரன் – வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்:
ராவணன் மற்றும் அவனது இனத்தாரின் கதை…
புராணங்களை தொன்மங்களை மீட்டுருவாக்கம் செய்வதும், ஊடாடுவதும், ஊடுருவுவதும், தற்கால அரசியல் பார்வையோடு அவற்றை அணுகுவதும், வரலாற்றை எழுதப்படாத மொழியில் எழுதுவதும், தற்கால அகவாழ்க்கைக்கு ஏற்றவாறு உருவாக்குவதும் இலக்கியத்தில் ஒரு வகை.இந்த வகையில் நான் படித்தவைகளில், படித்துக் கொண்டிருப்பவைகளில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் “அசுரன்”. ராவணன் என்கிற அசுரப் பேரரசனின் கதை. ஆனந்த் நீலகண்டனின் “Asura- Tale of the vanquished” என்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பே “அசுரன்”.
– இயக்குநர் ராம்

சோழன் ராஜா ப்ராப்தி
அகல்விளக்கு
நெஞ்சில் ஒரு முள்
கள்ளோ? காவியமோ?
கயமை
அறமும் அரசியலும்
சாவுக்கே சவால்
தீண்டாத வசந்தம்
ஏன் இந்த மத மாற்றம்?
தமிழ்ச் சிறுகதை : வரலாறும் விமர்சனமும்
நண்பர்க்கு
கண்ணகி
பங்குக்கறியும் பின்னிரவுகளும்
தம்பிக்கு
பொய்யும் வழுவும்
அந்த நாள்
மேல் கோட்டு
சுற்றுச்சூழலும் புத்தச் சமயமும்
அன்னை வயல்
சுயமரியாதை சூழ் உலகு: நிர்மாணப் பணியும் அணியும் - புதுவை சிவத்தின் எழுத்தியக்கம்
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்
வில்லங்கம் இல்லாமல் சொத்து வாங்குவது எப்படி?
கடலும் மனிதரும் (பாகம் -1)
மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்
வடு
குறள் 100 மொழி 100 
Selva kumar –
Ravanan patri therinthukolla vaasikavendiya book Asuran..
ART Nagarajan –
“அசுரன்”
வீழ்த்தப்பட்டவர்களின்
வீர வரலாறு
ஆனந்த் நீலகண்டன்,
தமிழில். நாகேஸ்வரி சண்முகம்.
ராவணன் மற்றும் அவரது
அசுர இன மக்களின் மகத்தான
வீர காவியம் இது.
மூவாயிரம் ஆண்டுகளாக
சாதியம் தலைவிரித்தாடிக் கொண்டிருந்த,
பேயாட்டம் போடுகின்ற அடங்காப்பிடாரியாக,
இன்று வரை அரசியலை
தன் கையில் வைத்திருக்கின்ற,
ஆதிக்க சமூகத்தால்,
தீண்டத்தகாதவர்களாக,
அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த,
இன்றும் ஒடுக்கப்படுகின்ற, மக்களால் தலைமுறை தலைமுறைகளாக,
இந்தக் கதை போற்றிப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.
இதுவரை இந்தக் கதையை
எந்த அசுரனும் சொல்லத் துணியவில்லை.
மடிந்து போனவர்களும், வீழ்த்தப்பட்டவர்களும்
தங்களது வீரக்கதையை
எடுத்துக் கூறும் புத்தகம் இது.
இராவணன் பத்து முகங்களை கொண்டவனாக,
நாம் அறிந்திருந்தாலும்,
சிதைக்கப்பட்ட
ஒரு முகத்தை தவிர,
மற்ற ஒன்பது முகங்களையும்
ஆதிக்க சமூகத்தால்
இன்று வரை
ஒடுக்க முடியவில்லை!
அசுரர்கள் தலைநிமிர்ந்து,
பிடர் சிலிர்த்து,
விடுதலை வேங்கைகளாக உருவெடுக்கும் வாய்ப்பு
எழத் தொடங்கியிருப்பதை வரவேற்க வேண்டிய காலமிது.
இராவணனின்
ஆதிக்க சாதி எதிர்ப்பு போராட்டத்தின் நீட்சியே
இந்த நூலின் மையக்கருத்தாக இருப்பது வெள்ளிடை மலை.
இன்றைய இளைஞர்கள்
வாசிக்க வேண்டிய
ராமாயண
ஆராய்ச்சி நூல்.
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்
ART. நாகராஜன்,
புத்தக வாசல், மதுரை.