1 review for அழியட்டும் பெண்மை
Add a review
You must be logged in to post a review.
₹50.00
1.காது குத்துவது பெண்களை அடிமைப்படுத்தும் சடங்கே!
2.பெண்கள் முடியைக் கத்தரித்துக் கொள்ள வேண்டும்
3.நகை அணிவதுதான் அழகா?
4.பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?
5.பெண்கள் போலீஸ் வேலைக்கும், இராணுவத்துக்கும் செல்ல வேண்டும்
6.பொது உடைகள்
7.பெண்களைப் படிக்க வையுங்கள்!
8.ஆண்- பெண் மாணவர்கள் ஒன்றாகப் படிக்கவேண்டும்
9.கோலமும், தையலும்தான் பெண்கள் கற்க வேண்டுமா?
10.பெண்களே கணவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
11.பெண்கள் தங்களுக்கேற்றத் துணைவர்களை ஏற்றுக் கொள்ள அனுமதிக்கவேண்டும்
12.ஒரு பெண்ணுக்கு இத்தனை கிராம் தங்கத்திற்கு மேல் இருக்கக் கூடாது என்று தடை செய்யவேண்டும்
13.பெற்றோர்கள் நடத்தும் திருமணங்கள் ஒழிய வேண்டும்
14.நம் பெண்களுக்குத் தாலி எதற்குப் பயன்படுகிறது?
15.தாலியை அறுத்தெறியும் வேலையே முதல் வேலை
16.மிஸ்ஸஸ்……………..என்ற முறை ஒழிய வேண்டும்
17.கணவன் – மனைவி முறை ஜாதி முறையைவிடக் கேடானதாகும்
18.இல்லறம் என்பது தொல்லையே!
19.திருமண அமைப்பைச் சட்டப்படி குற்றமாக்க வேண்டும்
20.நாணயக்கேடு, ஒழுக்கக்கேட்டிற்கு அதிகமான பிள்ளைகள் பெறுவதே காரணம்
21.பெண், ஆணின் சொத்தா?
22.இந்து மதத்தை எதிர்க்காத பெண்விடுதலைப் பேச்சுக்கள் அடிமைத்தனமே!
23.இலக்கியங்கள் பெண்களை அடிமைப்படுத்துகின்றன!
24.பெண்களுக்கு மூளை இல்லையா?
25.ஒழுக்கமும், கட்டுப்பாடும் இயற்கைக்கு விரோதமானவை
Delivery: Items will be delivered within 2-7 days
kmkarthikn –
அழியட்டும் பெண்மை
பெரியார்
காட்டாறு வெளியீடு
100 வருஷத்துக்கு அப்பறம் படிக்க வேண்டிய புத்தகத்த இப்பவே படித்துவிட்ட ஒரு மனதிருப்தி. ஆனால் இதையெல்லம் ஒரு மனுசன் 100வருஷத்துக்கு முன்னாடியே சொல்லி இருக்கார்னு நெனைக்கும் போது தான் பேராச்சர்யம்.
பெரியார் சொன்னதுல 30% தான் இப்போ நடைமுறைக்கு வந்திருக்கு கூடுதலா 40% நடைமுறைக்கு வரணும்னா இன்னும் 100 அல்லது 150 வருஷமாவது ஆகும். ஆனா பெரியார் சொன்னதுல 70% மட்டுமே நடைமுறைக்கு வரும் மீதி 30% வருவதற்கு வாய்ப்பே இல்லைனு தான் நான் நெனைக்கிறேன். ஏன்னா மனுசன் அவ்வளவு நவீனத்துவமா சொல்லியிருக்கார். நூறு வருஷத்துக்கு அப்பறம் படிக்க வேண்டிய புத்தகம்னு ஏன் சொன்னேன்னு இப்போ புரிஞ்சிருக்கும்.
1930 லிருந்து 1971 வரையிலான பெரியார் அவர்கள் பெண்கள் குறித்து பேசின,எழுதினவைகளின் சிறு தொகுப்பு தான் இந்த புத்தகம். இந்த புத்தகத்திற்கென நான் ஒன்னும் தனியா மெனக்கெட்டு எழுத வேண்டியதில்லை. இதில் உள்ள கட்டுரைகளின் தலைப்பை மட்டுமே இங்கு பதிவிட்டால் போதும் அது சொல்லும் இது புத்தகமா பூகம்பமா என்று,
1.பெண்கள் அலங்கார பொம்மைகளா?
2.பெண்களை படிக்க வையுங்கள்.
3.ஆண் – பெண் மாணவர்கள் ஒன்றாக படிக்க வேண்டும்.
4.கோலமும் தையலும் தான் பெண்கள் கற்க வேண்டுமா?
5.பெண்கள் போலீஸ் வேலைக்கும், இராணுவத்துக்கும் செல்ல வேண்டும்.
6.பொது உடைகள்
7.பெண்களே கணவனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
8.மிஸ்ஸஸ்… என்ற முறை ஒழிய வேண்டும்.
9.பெண் ஆணின் சொத்தா?
10.பெண்களுக்கு மூளை இல்லையா?
25 கட்டுரைகளைக் கொண்ட இந்த புத்தகத்திலிருந்து வெறும் பத்து கட்டுரைகளின் தலைப்பை மட்டுமே சொல்லியிருக்கேன். இதுக்கே அசந்துட்டா எப்படி மேற்கொண்டு அவரோட சில கருத்துகளையும் பதிவிடலாம்னு இருக்கேன். போய் கொஞ்சம் தண்ணி கிண்ணி குடிச்சிட்டு வர்றதுனா வந்துருங்க.
புத்ததகத்திலிருந்து,
“நான் அலங்காரப் பேச்சைத் தொண்டாகக் கொண்டவனில்லை” அவசியப்பட்ட வேலை நடக்க வேண்டும். என் ஆயுளும் இனி மிகமிகச் சொற்பம். இதையாவது செய்தாக வேண்டும் ஆதலால் கோபிக்காமல், ஆத்திரப்படாமல் நான் பேசியுள்ளவைகளைப் பற்றி சிந்தியுங்கள்.
வேறு எந்தக் காரியத்துக்காகவும் இந்து மதத்தை ஒழிக்காமல் தாட்சண்யம் பார்ப்பதாயிருந்தாலும் பெண்களுடைய சுதந்திரத்தை உத்தேசித்தாவது இந்து மதமென்பது அழிய வேண்டியது மிக்க அவசியமாகும்.
இவள் இன்னார் மகள் அல்லது இன்னார் மனைவி, இவ்வளவு சொத்துக்குச் சொந்தக்காரி என்று பிறர் கூறிப் புகழ வேண்டும் என்பதற்காகவே அலங்காரப் பதுமைகளைப் போல திரிகின்றார்களே அல்லாது, இவள் இன்ன தொழில் நிபுணத்துவம் பெற்றவள்! இவள் இந்தத் துறையில் திறமைசாலி எனப் பெயர் வாங்க வேண்டுமென்ற எண்ணமோ இத்தகைய பெண்களுக்கும் இருப்பதில்லை.
நம் பெண்களைப் போல பூமிக்குப் பாரமானவர்கள், மனிதனுக்குத் தொல்லையானவர்கள், நல்ல நாகரிகமான வேறு நாடுகளில் கிடையாது. இங்கு படித்த, படிக்காத பெண் எல்லோரும் பொம்மைகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் பெற்றோர்களும் கணவன்மார்களும் அவர்ளது அழகிய பொம்மைத் தன்மையைக் கொண்டே திருப்தி அடைகிறார்கள், பெருமை அடைகிறார்கள்.
பெண்கள் பெருமை, வருணனை அகியவைகளில் பெண்கள் அங்கம், அவயங்கள், சாயல் ஆகியவைகளைப் பற்றி 50 வரி இருந்தால், அவர்களது அறிவு, அவர்களால் ஏற்படும் பயன், சக்தி, திறமை பற்றி 5 வரி கூட இருக்காது. பெண்களின் உருவை அலங்கரிப்பது, அழகை மெச்சுவது சாயலைப் புகழுவது ஆகியவை பெண்கள் சமுதாயத்திற்கு அவமானம், இழிவு, அடிமைத்தனம் என்பதை ஆயிரத்தில் ஒரு பெண்ணாவது உணர்ந்திருக்கிறார்களா?
தற்காலப் படிப்பு ஆண்களை எப்படித் தொடை நடுங்கிககளாகவும், புத்தகப் பூச்சிகளாகவும் ஆக்கி விட்டதோ, அதைப்போல நம் பெண் மக்களையும் வெறும் அலங்காரப் பொம்மைகளாகவும், புல் தடுக்கிகளாகவும் ஆக்கிவிட்டது.
நம் நாட்டின் மந்திரி பூம்புகார் பத்தினிக் கோட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். நம் நாட்டில் கோடிக்ககணக்கான பெண்களில் அவள் ஒருத்தி தான் பத்தினி என்றால் மற்ற பெண்கள் எல்லாம் யார்? உன் தாய், என் தாய், உன் தங்கை, என் தங்கை மற்ற பெண்கள் அனைவரும் பத்தினித் தன்மை அற்ற விபச்சாரிகளா? இதை மக்கள் சிந்திக்க வேண்டும். எதற்காக ஒருத்தியை மட்டும் பத்தினி என்று புகழ வேண்டுமென்று கேட்கிறேன்.
தங்களை ஈனப்பிறவி என்று நினைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த வார்த்தை பிடிக்காது தான். இப்போது தாலி கட்டிக் கொண்டிருக்கும் பெண்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி வந்திருந்தால் அறுத்தெரியட்டும் அல்லது புருஷர்கள் கழுத்திலும் ஒரு கயிறு கட்ட வேண்டும். தங்களைத் தாங்களே அடிமை என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற சமூகம் என்றும் உருப்படியாகாது.
பெண்ணின் பெற்றோர் இப்பெண்ணுக்கு தங்கள் சொத்தில் ஒரு பாகம் பங்கிட்டு கொடுக்க வேண்டும். புருஷர்களையும் போலவே பெண்களுக்கும் சொத்து உரிமை உண்டு, தொழில் உரிமை உண்டு என்கிற கொள்கை ஏற்படாவிட்டால் எப்படி அவர்கள் சுயமரியாதை உடையவர்களாவார்கள்.
பெண் என்றால் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு உள்ளவர்களாகவே இருக்க வேண்டுமென்றுதான் சொல்கின்றனவே தவிர, சுதந்திரத்தோடு – அறிவோடு வாழ வேண்டுமென்று சொல்வன எதுவுமில்லை.
நான் பகுத்தறிவுவாதி என்று யாரைச் சொல்கிறேனென்றால், நாம் சொல்வதை துலுக்கரும் ஏற்றுக்கொள்ள வேண்டும், கிறிஸ்தவனும் ஏற்றுக்கொள்ள வேண்டும், மற்றவனும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட கருத்தைச் சொல்பவன் தான் பகுத்தறிவுவாதியாவான்.
அநேகம் பேருக்கு நான் சொல்வது அதிசயமாக இருக்கலாம். ஆச்சர்யமாகவும் இருக்கலாம். கலவரமாகக் கூடத் தெரியலாம். இறுதி வரை நீங்கள் நம்பி கடைபிடித்து வந்தவைகளுக்கு முரணாக நேர்மாறாக இருக்கலாம். எனக்குத் தோன்றின கருத்தினைக் கூறுகின்றேன். ஏற்க முடிந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள் இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள்.
என்னடா எல்லாத்தையுமே சொல்லிட்ட அப்பறம் நாங்க எதுக்கு புத்தகம் வாங்கணும்னு கேக்கறீங்களா அதான் இல்ல, மாங்காயை குறிபார்த்து கல்லெறியும் போது அந்தக்கல் சில இலைகளை மட்டும் உதிர்த்துவிட்டு மறைவதைப் போலத்தான் இது. இதெல்லாம் சிதறி விழுந்த சோற்றுப்பருக்கைககள் முழு விருந்தே புத்தகத்துல இருக்கு. அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். அனைவரும்னா அனைவரும் தான்.
#Kmkarthikeyan_2020- 50