1 review for பிரேக் அப் குறுங்கதைகள்
Add a review
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____
₹180.00 Original price was: ₹180.00.₹170.00Current price is: ₹170.00.
எந்த வடிவத்திற்குள்ளும் சிக்காமல் கதைக்குத் தேவையான வடிவத்தை விதம் விதமாக உருவாக்கிக்கொள்கின்றன பிரேக் அப் குறுங்கதைகள். அதேபோல எந்த மொழி வடிவத்திற்குள்ளும் மாட்டிக்கொள்ளாமல் வெவ்வேறு விதமான மொழி வடிவங்களில் கதைகள் சீறிப் பாய்கின்றன.
பித்துப்பிடித்த நிலையில் உருவாகும் பிரேக் அப்களை அதே பித்து நிலையில் பகடியாக எழுதப்பட்டிருக்கிறது.
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
தமிழர்கள் வரலாறு / Tamilan's History
Kmkarthikn –
பிரேக் அப் குறுங்கதைகள்
அராத்து
கிழக்கு பதிப்பகம்
சும்மா வழவழனு இழுக்காம ஒரே வரில இந்த புத்தகத்த பத்தி சொல்லுங்கன்னு சொன்னா நான் சொல்லும் அந்த ஒரு வரி விமர்சனம் இப்படித்தான் இருக்கும்.
எப்படி? இதோ இப்படி,
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மேலே உள்ள அந்த ஒரு வரி விமர்சனம் புரியாதவங்க மேற்கொண்டு படிக்கலாம்.
36 கதைகள். மேலோட்டமா படிச்சீங்கன்னா எல்லா கதையுமே ஏதோ அஜால் குஜால் கதையாகத்தான் தெரியும். என்ன தெரியும் தெரியாதுன்னுக்கிட்டு ஆமா எல்லாமே அந்த மாதிரிக் கதைகள் தான். ஆபாசமும் விரசமும் பக்கத்துக்குப் பக்கம் நிறைஞ்சு தான் இருக்கு ஆனால் இந்த புத்தகத்தின் நோக்கம் அதுவல்ல. இது சொல்ல வரும் செய்தி உங்களின் சகிப்புத்தன்மை மற்றும் புரிந்துணர்வு எந்தளவுக்கு பலமிழந்து இருக்கிறது என அடிக்கோடிட்டுக் காட்டுவதே. ஆனால் அதையெல்லாம் கவனிக்கவே கவனிக்காம வெறும் வார்த்தைகளை வைத்து மட்டுமே ஒரு புத்தகத்தை ஒதுக்குவீர்கள் என்றால் இந்த புத்தகம் உங்கள பிரேக் அப் பண்ணிடும்.
சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு – உதாரணத்துக்கு ஒரு கதையின் சுருக்கம் – காதலிக்கும் போது ரெண்டு பேரும் அன்பொழுக பேசிக்கிறாங்க. மாறிமாறி வாக்குறுதி குடுத்துக்கிராங்க. கல்யாணத்துக்கு அப்பறம் நான் குண்டாயிட்டன்னா என்ன ஏத்துக்குவியா? கை போச்சுனா ஏத்துக்குவியா? கண்ணு போச்சுனா ஏத்துக்குவியா?னு பதிலுக்கு நம்ம பயலும் நீயே இல்லேனாக்கூட உன்ன ஏத்துக்குவேன்னு மட்டும் தான் சொல்லல மத்த எல்லா வாக்குறுதியும் குடுக்கிறான். ஆனா கல்யாணத்துக்கு அப்பறம் நடந்தது என்ன. அவளோட தொடைல ஒரு பெரிய மரு இருக்குன்ற ஒரே ஒரு காரணத்துக்காக டைவர்ஸ். அதென்னங்கடா காதலிக்கும் போது வேற வாய் கல்யாணத்துக்கு அப்பறம் நாற வாயாடா. இந்தக் கதைல எங்க இருக்கு சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு இப்படித்தான் பல கதைகள் உங்களுக்குள்ள ஒழிஞ்சிக்கிட்டு இருக்கிற பல மிருகங்கள கெளப்பி விடும்.
கொட்டாய் தாத்தா தன் மனைவியை பிரேக் அப் பண்ணதுக்கான காரணம் ஆழ்ந்து யோசிக்க வேண்டியது. இன்னும் எத்தனை கொட்டாய் தாத்தாக்கள் இந்த உண்மை தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருப்பார்களோனு நெனைக்க வெச்சிருச்சு இந்த கொட்டாய் தாத்தா கதை. பூப்பந்துனு ஒரு கதை செம்ம மெஸேஜ். கற்பில் சிறந்தவள்னு நிரூபிக்க பொசுக்கு பொசுக்குனு தீக்குளிக்கிற பெண்களைப் பகடி செய்யும் கதை. அதுவும் இந்தக் கதையை ராமாயண காலத்தைத் தொட்டு எழுதியதை வைத்து பார்க்கும் போது இது பெண்களை மட்டும் பகடி செய்யும் கதையல்ல என்பது புரிந்தது. கண்ணனின் குழல்னு ஒரு கதை. கண்ணனுக்கே பிரேக்அப் ஆன கதை. ஊரில் இருக்கும் அனைத்து கோபியருக்கும் நீ மட்டுமே காதலன் என்றால் இடையர்களை யார் கவனிப்பது என ஊரில் இருக்கும் அனைத்து இடையர்களுக்கும் நான் தான் காதலி என ஒருத்தி கிளம்புவதாய் அந்தக் கதை முடியும். எப்படி நெத்தியடி.
காதல் தீரும், காமம் அலுக்கும், விருப்பம் மாறும், புதிய ஈர்ப்பு தோன்றும் இதெல்லாம் மனித இயல்பு. இதையெல்லாம் எப்படி சமாளிக்கணும், நம்ம உறவுகள் நம்மள பிரேக் அப் பண்ணாம இருக்க நம்ம என்ன செய்யணும் இதையெல்லாம் அராத்தும் சொல்லலைனா வேற யார் தான் சொல்றது. இதுவும் சொல்லப்பட வேண்டியவை தானே. இதுவும் கலந்தது தானே வாழ்க்கை. பிரியாணிக் காதலுக்காக பெத்த புள்ளைங்களயே கொன்ன சம்பவத்தையும் பாத்துக்கிட்டுத்தானே இருக்கோம். அப்படி இருக்கும் போது இந்தக் கதைகளெல்லாம் வேற ஏதோ தேசத்துக் கதைகள்னு ஒதுக்கிட முடியுமா? அப்படி ஒதுக்கிப் பாக்கறதால யார காப்பாத்த நினைக்கிறீங்க. உண்மையைச் சொல்லணும்னா இந்த உண்மையின் சூட்டிலிருந்து உங்கள தற்காத்துக்கணும்னு தான் விரும்பறீங்கன்னு சொல்லணும்.
எவ்வளவு தான் அராத்துக்கு சொம்படிச்சாலும் சில கதைகள்ல சில தேவையில்லாத பகுதிகள் முகம் சுழிக்கற அளவுக்குத்தான் இருக்கு. உண்மையையும் ஒத்துக்கத்தான் வேணும். சில வர்ணிப்புகளெல்லாம் எல்லை மீறி போயிருக்கு. சில கதைகள் மொத்த புத்தகத்தோட அழகையே குழைக்குது. ஆனா அதை எல்லாத்தையும் சரி பண்றது அராத்தோட எழுத்து நடை. சிரிக்கறதா? படிக்கறதா? எதை மொதல்ல பண்றது கொழம்பிப் போற அளவுக்கான எழுத்து நடை.
திருக்குறள்லயே நாம தவிர்க்க வேண்டிய குறள்களெல்லாம் இருக்கு அதுபோல இதுலயும் சில கதைகளை, சில கதைகளின் சில பகுதிகளை தவிர்த்திட்டு பாக்கணும்ங்றதுதான் என்னோட வேண்டுகோள்.
#Kmkarthikeyan_2020-44