1947 இல் குஜராத்தி மொழியில் எழுதப்பட்ட “மனவினி பாவாய்’ என்ற நாவலின் தமிழாக்கம். குஜராத்தின் கிராமப்புற வாழ்வை இயல்பாக சித்திரிக்கிறது. 1900 ஆம் ஆண்டு குஜராத்தின் கிராமப் பகுதிகளில் நிலவிய பஞ்சமே நாவலின் பின்புலம். உணவு கிடைக்காமல் உயிர் வாழ்வதற்காக மக்கள் போராட வேண்டிய அவலநிலை நம் மனதை உருக்குகிறது. பஞ்சம் நிலவிய கிராமப் பகுதிகளிலும் கொள்ளையர்கள் வந்து கொள்ளையடிக்கப் போகிறார்கள் என்ற அச்சம் நிலவுவதும், அப்படியே வந்தாலும் உணவுக்காக வைத்திருக்கும் ஒருவேளைக்கான தானியத்தைத் தவிர வேறு என்ன இருக்கிறது கொள்ளையடிக்க? என்ற மக்களின் அலட்சியப்போக்கும் மிக இயல்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.
வறுமையும், பசியும், பட்டினியும் நிலவியபோதிலும் ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்குமிடையில் மலரும் காதலும், அவர்களுக்கு இடையில் எழும் சிக்கல்களும், மனப் போராட்டங்களும் நாவலை முழுமையாக்குகின்றன. நூறாண்டுகளுக்கு முந்தைய இந்திய கிராமம் ஒன்றின் வாழ்வை உணர்ந்து கொள்ள உதவும் நூல்.
– தினமணி
Reviews
There are no reviews yet.