Sale!
சாண்டோ சின்னப்பா தேவர்
Publisher: சிக்ஸ்த் சென்ஸ் Author: பா. தீனதயாளன்Original price was: ₹133.00.₹125.00Current price is: ₹125.00.
- தேவர் திரையுலகில் தனது முதலீடாகச் செய்த விஷயங்கள் மூன்று. எம்.ஜி.ஆர்., முருகர், விலங்குகள். எம்.ஜி.ஆரால் தேவர் வளர்ந்தாரா? தேவரால் எம்.ஜி.ஆர். திரையுலக வெற்றிகளைக் குவித்தாரா? இரண்டுமே நிகழ்ந்தன. யாருமே எளிதில் நெருங்கிப் பழக முடியாத எம்.ஜி.ஆர்., தேவரோடு மட்டும் விடாமல் பாராட்டிய நட்பு ஆச்சரியத்துக்குரியது. என்னால் எம்.ஜி.ஆரை வைத்து மட்டுமல்ல; யானை, பாம்பை வைத்துக்கூட வெற்றிப்படத்தைக் கொடுக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய தேவரின் சாதனை அதிரடியானது. முதல் அமாவாசையில் பூஜை போட்டு மூன்றாவது அமாவாசைக்குள் முழுபடத்தையும் முடித்துவிடும் அவரது வேகத்தில் கோடம்பாக்கமே கிடுகிடுத்தது. இறுதிவரை வெற்றிக்கொடி நாட்டிய தன்னிகரற்ற தயாரிப்பாளரின் கதை இது.
Delivery: Items will be delivered within 2-7 days
Book My Book –
சினிமாவுக்குள் தேவர் எப்படி நுழைந்தார்? ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆருக்கும் தேவருக்கும் நட்பு எப்படி இருந்தது? ஏன் முறிந்தது? மீண்டும் எப்படித் துளிர்த்தது? எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் எடுப்பதற்குள்ளாகவே எத்தனையோ தயாரிப்பாளர்கள் நொடிந்து போயிருக்கிறார்கள். தேவரால் மட்டும் எப்படி தொடர்ந்து இத்தனை படங்களைக் கொடுக்க முடிந்தது? ஒரே இனத்தைச் சார்ந்தவர் என்றாலும் தேவர் ஏன் சிவாஜியை வைத்து படம் எடுக்கவில்லை? எம்.ஜி.ஆரையும் முருகனையும் மட்டுமே நம்பி படம் எடுத்த தேவர், திடீரென மிருகங்களை நம்ப ஆரம்பித்தது ஏன்? மொழியே தெரியாமல், பாலிவுட்டிலும் நுழைந்து தேவர் கலக்கியது எப்படி? இவை மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்தப் புத்தகம்.
எழுத்தாளர் முகில்
ART Nagarajan –
சாண்டோ
MMA.சின்னப்பா தேவர்
பா. தீனதயாளன்,
சிக்ஸ்த் சென்ஸ்.
ஒரு மிலிட்டரி ஓட்டலில் வயித்துக்கு சாப்பிட்ட கடன்
ஆறு ரூபாய் கொடுக்க முடியாமல்
ஓட்டல் மொதலாளி
கழுத்துல துண்டை போட்டு இருக்குனதுல சின்னப்பாவோட கண்ணுமுழி ரெண்டும்
பிதுங்கி வெளியே வந்துடும் போல இருந்தது.
கடனுக்காக
செத்து மடிவது
சின்னப்பாவுக்கு
தலை குனிவாக இருந்தது ஆனாலும் உயிரை விடுவதற்கு சின்னப்பா அஞ்சவில்லை. மருதமலையில் செத்துவிட வேண்டியதுதான்
என மருதமலையில்
நடந்து போகும்போது
இடறி விழுந்தார்,
விழுந்து எழும் போது
அவர் எடுத்தது
ஒரு சிகரெட் டப்பா
உள்ளே பார்த்தால்
ரெண்டு சிகரெட்டும்,
ஒரு பத்து ரூபாய் தாளும்.
என் மானத்தை காப்பாத்திட்டியே சாமி, மருதமலை முருகா
இனி உன்னை மட்டும்தான் கும்பிடுவேன் என்றார் தேவர்.
அன்றிலிருந்து தான்
சின்னப்பா தேவர்,
MMA சின்னப்பா தேவர் ஆனார். அதாவது
(MMA வின் பொருள் )
மருதமலை
மருதாசல மூர்த்தி
அய்யாவு
சின்னப்பா தேவர்.
டூரிங் டாக்கீஸில்
சினிமா பார்ப்பது
சின்னப்பாவுக்கு
ருசிகரமான அனுபவம்.
தரை டிக்கெட் கையில்,
பீடி வாயில்,
உள்ட்ராயரோட மணலில் உட்கார்ந்து சினிமா பார்ப்பார்.
கோவை பிரீமியர் ஸ்டூடியோ,
பி. ஆர்.பந்துலுவுக்கு டூப்பாக முதன் முதலில் நடித்தார், அப்போது
பி. ஆர். பந்துலு நடிகர்.
வேணுகானம் படப்பிடிப்பில் முதன்முதலாக அவரை பார்க்கிறார் தேவர்,
அவரை எம். ஜி. ராம்சந்தர் என்கிறார்கள். பின்பு ஆராய்ச்சிமணி படத்தில் அறிமுகமாகிறார்கள்.
மாடர்ன் தியேட்டர்ஸ் படமான சர்வாதிகாரியில்
தேவருக்கு சான்ஸ்
வாங்கி தருகிறார்,
நட்பு இறுகுகிறது.
1955ம் ஆண்டு
M. G. R.ன் துணையோடு பானுமதியை வைத்து
‘தேவர் பிலிம்ஸ்’ தயாரிப்பில்
தாய்க்கு பின் தாரம்
படத்தை தயாரிக்க
தம்பி திருமுகம் இயக்குநரானார்.
படம் பிரம்மாண்ட வெற்றி, ஆனால்
எம். ஜி. ஆருக்கும்,
தேவருக்கும் மனஸ்தாபம்.
தேவரின் அடுத்தபடம்
நீல மலைத் திருடன்
ரஞ்சன், அஞ்சலிதேவி,
EV. சரோஜா, படம் வெற்றி
“திருடனல்லவா,
ஜனங்கள் வந்தா ஓடுவான்” ஆனந்த விகடனின்
விமர்சன பஞ்ச்.
தமிழ் சினிமாவில்
பூஜைக்கான தேதியும்,
படம் ரிலீஸ் தேதியையும்
தேவரால் மட்டுமே அறிவிக்க முடிந்தது.
1956முதல் 1978வரை சுமார் இருபத்தி ஐந்து சினிமாக்களுக்கும் மேலாக,
தமிழ், இந்தி, ஆங்கிலம் என
பிரபல நட்சத்திரங்களை வைத்து வெற்றி படங்களை தந்தவர் தேவர்.
M.G.R கேட்ட சத்தியத்தை செய்து கொடுத்ததால் தன் வாழ்நாள் முழுவதும் சிவாஜி கணேசனை வைத்து தேவர் சினிமா எடுக்கவில்லை.
ஆனால் தேவர் வீட்டு திருமணங்கள் அனைத்தும் சிவாஜி கணேசன்தான் முன்னின்று நடத்தி வைத்தார்.
சரம் தொடுத்தது போன்ற வெற்றிகளை ருசித்த
தேவரின் வாழ்வில்
நிகழ்ந்த சறுக்கல்களிலும்
நாம் கற்றுக்கொள்ள
நிறைய செய்திகள்
இருக்கின்றன.
கடும் உழைப்பும்,
அஞ்சாத நேர்மையும்,
சமரசம் செய்து கொள்ளாத நேர்த்தியையும் பின்பற்றும் எவருக்கும்
வெற்றி நிச்சயம்
என்பதற்கு
தேவர் மட்டுமே சாட்சி.
1915 ஜூன் 28ம் தேதி
கோவை ராமநாதபுரத்தில்
பிறந்த தேவர்
1978 செப்டம்பர் 8ம் தேதி ஊட்டியில் நடந்த
மூன்று படங்களின்
தொடர் படப்பிடிப்புகளில் கலந்து கொண்ட தேவர் நெஞ்சுவலியால்
கோவை பீளமேடு குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
தமிழ் சினிமா வரலாற்றில்
தேவர் ஒரு தனி அத்தியாயம்,
தேவரைப் பற்றி இன்னும்
அதிகமான செய்திகளையும்
மிகத் துல்லியமான தகவல்களை,
தேர்ந்த எழுத்து நடையிலும்,
வெகு நேர்த்தியாக எழுதப்பட்டது இந்த நூல்.
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்
ART.நாகராஜன்,
புத்தக வாசல், மதுரை.
28.04.2020.