Be the first to review “நட்சத்திரவாசிகள்”
You must be logged in to post a review.
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
Subtotal: ₹49,244.00
Subtotal: ₹49,244.00
புக்மைபுக் தளத்தில் இடம்பெறும் புதிய புத்தகங்கள், சிறப்பு தள்ளுபடிகள் பற்றிய புதிய தகவல்களை முதலில் பெற..
____
₹290.00 Original price was: ₹290.00.₹270.00Current price is: ₹270.00.
சின்னச் சின்ன விஷயங்கள் கூட தொழில்நுட்பத் துறையில் இயங்குபவர்களுக்கு என்ன விதமான மன அழுத்தத்தைக் கொடுக்குமென்பதைச் சொல்வதற்கு என்னிடம் ஏராளமான தரவுகள் உண்டு. பளபளக்கும் கண்ணாடிக் கட்டிடங்களில் குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்தபடி நன்கு சம்பாதிக்க, தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் பலரும் அதற்கு கொடுக்கும் விலை அதிகம். ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது உலகிலேயே அதிகம் இதய நோயால் இறப்பவர்கள்(அதுவும் குறைந்த வயதிலேயே இறப்பவர்கள்) தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்கள் தான். அவ்வளவு கடினமான மன உளைச்சல்களைத் தரும் இந்தத் துறையில் பணிபுரிவது உல்லாச சொகுசு வாழ்க்கைக்காக மட்டுமல்ல. இந்த வேலையை தன்னுடைய கனவாக லட்சியமாக நினைப்பவர் சிலபலர். அதற்காகவே எவ்வளவோ அழுத்தங்களையும் அவமானங்களையும் தாங்கிக் கொண்டு இதில் பணிபுரிகின்றார்கள். தொழில்நுட்பத்துறையின் இந்த கோணத்தை ‘நட்சத்திரவாசிகள்’ நமக்கு காட்டுகிறது.
தொழில்நுட்ப துறை ஒரு வித்தியாசமான பணியமைப்பைக் கொண்ட இடம். இங்கே மனித உணர்வுகளுக்கு மரியாதையில்லை. பக்கத்து இருக்கையில் பணிபுரிபவர் பைத்தியம் பிடிக்கும் அளவுக்கு பாதிக்கப்பட்டாலும் ஏன் இப்படி நடக்கிறது என்று தட்டிக் கேட்க எந்த மனிதாபிமானமும் அங்கே எஞ்சியிருக்காது. அப்படியே கேட்க நினைத்தாலும் அதற்கு அனுமதி இருக்காது அல்லது தனக்கு அப்படி நிகழாமல் இருக்க செய்ய வேண்டிய ஆயத்தங்களுக்கே நேரம் போதாது. எட்டு மணி நேரம் அருகருகே அமர்ந்து வேலை செய்தாலும் அவரவர் வேலையை தவிர வேறு எந்த பெரிய ஒட்டுதலும் யாருக்கும் யாருடனும் இருக்காது. ஆனால் மும்மாதத்திற்கு ஒருமுறை பெரிய நட்சத்திர விடுதியில் மதிய உணவும், வருடம் ஒருமுறை குடும்பத்துடன் கலந்து கொள்ள பெரிய கொண்டாட்டமும் இயந்திரத்தனமாய் நிகழும். அது போன்ற கொண்டாட்டங்களில் கூட தனித்தனி தீவுகளாக புன்னகையணிந்த ரோபோ போல, ஏதோ இன்னொரு வேலை போல செய்து விட்டு வருவார்கள். இவர்களுக்கு அலுவல் சார்ந்த எல்லாமே வேலை தான். இதை சுட்டும் பல காட்சிகள் இந்த நாவலில் உண்டு.
இதுவரை தொழில்நுட்ப துறை சார்ந்து வெளி வந்திருக்கும் நாவல்கள் எதை பேசியிருக்க வேண்டுமோ அதை ‘நட்சத்திரவாசிகள்’ பேசியிருக்கிறது. தொடல்நுட்பத் துறை ஒரு மாய உலகமல்ல. அங்கே வேலை செய்பவர்கள் எல்லாம் வேற்றுகிரகவாசிகள் அல்ல. அழகாய் ஜொலிக்கும் எந்த நட்சத்திரமும் அருகில் நெருக்கிய பிறகு தானே அது இன்னொரு நெருப்புக்கோளம் என்று தெரியும். அப்படி தணலென தகிக்கும் அவ்வுலகில் சில முக்கிய நெருக்கடிகளை நமக்கு காட்டித்தருகிறது இந்த நாவல்.
– Lavanya Sundararaja
Delivery: Items will be delivered within 2-7 days
You must be logged in to post a review.
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Reviews
There are no reviews yet.