பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற சரித்திர நாவல்களை உங்களுக்குப் பிடிக்கும் என்றால் நிச்சயம் இந்தப் புதிய நாவலும் உங்களுக்குப் பிடித்துவிடும். முழுக்க வாசித்து முடித்தபிறகும் மீண்டுமொருமுறை, இன்னுமொருமுறை என்று வாசிக்கத் தூண்டும்.
சோழர் காலப் பின்னணியில் விரியும் பிரமாண்டமான இந்தப் புதினத்தை வாசிக்கும்போது திரைப்படம் போல் காட்சிகள் மனக்கண்ணில் விரிகின்றன.
ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் அரசியலை, வரலாற்றை, வாழ்க்கை முறையை, போராட்டத்தை அட்டகாசமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் தேவி யசோதரன்.
வீரத்துக்கும் விவேகத்துக்கும் இலக்கணமாகத் திகழும் யவனியின் சாகசங்கள் நம் நினைவுகளில் நிரந்தரமாகத் தங்கிவிடுகின்றன. நேசம், காதல், பகை, சூது, வன்மம், போராட்டம் என்று கடல் அலைகளுக்குப் போட்டியாகப் பொங்கும் உணர்ச்சிகள் இந்நாவலை மறக்கமுடியாத ஒரு பேரனுபவமாக உயர்த்திவிட்டன.
ஆங்கிலத்தில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த ‘எம்பயர்’ நாவலின் அதிகாரபூர்வமான மொழியாக்கம்
யவனி
Publisher: கிழக்கு பதிப்பகம் Author: சத்தியப்பிரியன், தேவி யசோதரன்₹400.00
சோழர் காலப் பின்னணியில் விரியும் பிரமாண்டமான இந்தப் புதினத்தை வாசிக்கும்போது திரைப்படம் போல் காட்சிகள் மனக்கண்ணில் விரிகின்றன.
ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் அரசியலை, வரலாற்றை, வாழ்க்கை முறையை, போராட்டத்தை அட்டகாசமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் தேவி யசோதரன்.
வீரத்துக்கும் விவேகத்துக்கும் இலக்கணமாகத் திகழும் யவனியின் சாகசங்கள் நம் நினைவுகளில் நிரந்தரமாகத் தங்கிவிடுகின்றன. நேசம், காதல், பகை, சூது, வன்மம், போராட்டம் என்று கடல் அலைகளுக்குப் போட்டியாகப் பொங்கும் உணர்ச்சிகள் இந்நாவலை மறக்கமுடியாத ஒரு பேரனுபவமாக உயர்த்திவிட்டன.
ஆங்கிலத்தில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த ‘எம்பயர்’ நாவலின் அதிகாரபூர்வமான மொழியாக்கம்.
Delivery: Items will be delivered within 2-7 days
ART Nagarajan –
யவனி
தேவி யசோதரன்
தமிழில்: சத்தியப்பிரியன்
கிழக்கு பதிப்பகம்.
பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற சரித்திர நாவல்களை உங்களுக்குப் பிடிக்கும் என்றால் நிச்சயம் இந்தப் புதிய நாவலும் உங்களுக்குப் பிடித்துவிடும். முழுக்க வாசித்து முடித்தபிறகும் மீண்டும் ஒருமுறை,
இன்னும் ஒருமுறை, என்று வாசிக்கத் தூண்டுகிற நாவல்.
சோழர் காலப்
பின்னணியில் விரியும் இந்தப்
பிரமாண்டமான புதினத்தை வாசிக்கும்போது
திரைப்படம் போல் காட்சிகள்
மனக் கண்னில் விரிகின்றன.
ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் அரசியலை, வரலாற்றை,
வாழ்க்கை முறையை, போராட்டத்தை,
அட்டகாசமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ராஜேந்திர சோழன் போர்க்களத்தில் பெற்ற வெற்றிக்கு பரிசாக வந்த போர்க்கைதிகளில்
பனிரெண்டு வயது சிறுமியாக யவன தேசத்தில் கைது செய்யப்பட்டு சோழப்படையில் சேர்க்கப்பட்டவள் “அரெமிஸ்”
“அரெமிஸ்” யவன தேசத்தை சேர்ந்தவள் என்பதால்
கதை முழுதும் “யவனி”ஆகி நமக்குள் பிரவேசிக்கிறாள்.
வீரத்திற்கும்,
விவேகத்திற்கும்,
இலக்கணமான,
யவனியின் சாகசங்கள்
ராஜேந்திர சோழனின்
மனதில் மட்டுமல்ல
நமது மனதிலும்
நீங்கா இடத்தைப் பெறுகிறது.
வாசியுங்கள்
வாசிப்பு அறிவை மேம்படுத்தும்
ART.நாகராஜன்
புத்தக வாசல், மதுரை.